தன் டிரைவரின் திருமண வரவேற்பில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் (வைரல் வீடியோ)

VM| Last Updated: திங்கள், 4 மார்ச் 2019 (19:18 IST)
நடிகர் விஜய் மிகவும் எளிமையானவர். தன்னுடன் இருப்பவர்களை மிகவும் நேசிப்பவர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 


 
தற்போது தெறி மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், விவேக் உளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
 
பிசியான நடித்து வரும் விஜய் அவ்வப்போது தனது ரசிகர்களின் திருமணங்களுக்கு சென்றுவருவார். இந்நிலையில் தன்னுடைய  டிரைவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
டுவிட்டர் வீடியோ லிங்க்


இதில் மேலும் படிக்கவும் :