செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:50 IST)

விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் திடீர் நிறுத்தம்… இதுதான் காரணமா?

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.