செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (16:39 IST)

மாநாடு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய கலைஞர் தொலைக்காட்சி!

மாநாடு படத்தில் ரிலீஸ் பிரச்சனைகள் நேற்று நள்ளிரவு வரை பஞ்சாயத்து நடந்து கடைசியில்தான் ரிலீஸ் ஆனது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திடீரென படம் ரிலீஸாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்கு அவர் பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைக் கொடுக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க, பல தயாரிப்பாளர்கள் மாநாடு தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளனர். அதில் ஒருவராக வந்த உதயநிதி ஸ்டாலின் மாநாடு படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சிக்காக பெற்றுக்கொண்டு மிகப்பெரிய தொகையை கொடுத்து உதவி செய்துள்ளாராம்.