சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (10:14 IST)

தேர்தல் நெருங்கும் வேளையில் வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்ற விஜய்!

விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்து விட்ட நிலையில் அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் கேரளாவில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில் தற்போது துபாய்க்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு காட்சிகளை படமாக்கி முடித்து விட்டு தேர்தலுக்கு முன்பாக இந்தியா திரும்பும் என சொல்லப்படுகிறது.