வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (08:15 IST)

விஜய்யின் கோட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அப்டேட்களைக் கொடுத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

இன்று விஜய் மற்றும் பவதாரணி குரலில் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் வெளியாக உள்ளது. அதற்கு முன்பாகவே நேற்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் இரண்டு வேடங்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது போல வடிவமைத்துள்ளனர். இதில் ஒரு விஜய் வயதான கெட்டப்பிலும், இன்னொரு விஜய் இளமையான கெட்டப்பிலும் இருக்கிறார்.