புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (15:47 IST)

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஒரு விஜய்யின் தோற்றம் மிகவும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் டி ஏஜிங் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அப்டேட்களைக் கொடுத்து வருகிறது தயாரிப்பு நிறுவனம்.

அதில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவின் ஒவ்வொரு ப்ரெமையும் எடுத்து பகிர்ந்து ரசிகர்கள் பலர் தங்களுக்குத் தோன்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு கருத்தாக கோட் திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதையாக உருவாகி வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.