திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 அக்டோபர் 2020 (10:18 IST)

அமமுக பொருளாளர் உடல்நிலை மேலும் பின்னடைவு – தொண்டர்கள் கவலை!

அமமுகவின் பொருளாளரும் முன்னாள் அதிமுக எம் எல் ஏவுமான வெற்றிவேலின் உடல்நிலை மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவில் முன்னாள் எம் எல் ஏவாகவும் தற்போது அமமுகவின் தற்போதைய பொருளாளராகவும் இருந்து வரும் வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றை விட இன்று அவரின் உடல்நிலை மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.