செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (17:25 IST)

விஜய் சேதுபதிக்கு கதை தயார்…. ராம ராஜன் எடுத்த அதிரடி முடிவு !

எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் போன்று சினிமாவில் நடித்து  தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டிவரை பரபரப்பாகப் பேசப்பட்ட நடிகர் தான் ராமராஜன். அவரது கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் , மனசுக்கேத்த மகராசா போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களை கட்டிபோட்டது.

அதன்பிறகு, அதிமுக கட்சியில் இணைந்து, நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு கதை தயார் செய்துள்ளதாகவும் , அதில் நடிக்க விஜய் சேதுபதிதான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய்சேதுபதி அப்படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது குறித்து விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்` ராமராஜன் மருதாணி, சோலை புஷ்பங்கள் போன்ற படங்களை இயக்கி நடிகரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.