திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:49 IST)

விஜய்க்கு மட்டும் இல்ல.... விஜய் மகனுக்கும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி - அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களையும் ஏற்று வெறித்தனமாக நடித்து வருகிறது. குறிப்பாக விஜய் சேதுபதியை ஹீரோவாக பார்ப்பதை விட வில்லனாக பார்த்து ரசிக்கும் ரசிகர்களே ஏராளம்.

அந்தவகையில் தனது வில்லன் பயணத்தை விக்ரம் வேதா படத்தில் துவங்கி, பேட்ட , மாஸ்டர் என தொடர்ந்து கொண்டே போகிறது. தற்போது விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் விஜய் சேதுபதி தெலுங்கில் "உப்பெண்ணா" என்ற படத்தில் panja vaishnav tej ற்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தமிழ் உரிமையை விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தமிழில் இப்படத்தின் ஹீரோவாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. விஜய் மகன் ஹீரோவாக களமிறங்க விஜய் சேதுபதி வில்லனா..! வாவ் வெறித்தனம் வெயிட்டிங் என விஜய் ரசிகர்கள் சிலிர்ப்படைந்து விட்டனர். பின்னர் இது உண்மை தானா என நெருங்கிய தரப்பில் விசாரித்தபோது இது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. மேலும் சஞ்சய் டங்களில் நடிப்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என விஜய் தரப்பு விளக்கம் கொடுத்தது. ஒரு வேலை அப்படி மட்டும் நடந்தால்..... ப்பாஹ் நெனச்சு பார்க்கவே சிறப்பா இருக்கு.