வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (18:22 IST)

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

Email Teaser
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.


 
மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ ,  ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃபர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். இந்த நிலையில்  நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதாநாயகனான ஆதவ் பாலாஜி,  மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

டீசரை ஆர்வமுடன் பார்த்து ரசித்த நடிகர் விஜய்சேதுபதி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்களுக்கு அன்பு முத்தங்களையும் பரிசளித்து இன்ப அதிரச்சி அளித்தார்.

ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் அதேசமயம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.