1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:38 IST)

விஜய் சேதுபதி- பொன்ராம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? படத் தலைப்பில் நடக்கும் மாற்றம்!

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் அடுத்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து வரும் 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பொள்ளாச்சி பழனி, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் படங்களை வரிசையாக ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் ரிலீஸ் செய்யும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு DSP என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படத்தின் தலைப்பை மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தை நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.