1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:40 IST)

முடிவடையும் நிலையில் கவினின் ‘டாடா’: ரிலீஸ் எப்போது?

dada
நடிகர் கவின் நடித்துவரும் ‘டாடா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
 கடந்த சில மாதங்களாக நடிகர் கவின் நடித்து வரும் ‘டாடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இன்னும் 5 நாட்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்றும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது 
 
கவின் நடித்த லிப்ட் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் வெற்றிபெறும் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.