1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (17:20 IST)

விஜய்சேதுபதியின் ‘லாபம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக ஒரு சிலர் வதந்தியை கிளப்பிய நிலையில் சற்று முன்னர் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
செப்டம்பர் 9-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை நேரத்தில் ‘லாபம்’ படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ரமேஷ் திலக், கலையரசன் உள்பட பலர் நடித்த ‘லாபம்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது 
 
விவசாயிகளின் உரிமைகளை எதிரொலிக்கும் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்தது
 
விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் நடித்துள்ள மாமனிதன் உள்பட மேலும் ஒரு சில படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது