ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (21:18 IST)

கல்லூரி மாணவனாக நடிக்க பயந்தேன்- பிரபல நடிகர்

Shooting
கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2008 காலக்கட்டத்தில் நடக்கும் கதையான இப்படத்தில் நடிப்பதற்கு 10 கிலோ வரை எடை குறைத்துள்ளதாகவும்,  முதலில் கல்லூரி மாணவனாக நடிக்கப் பயந்தேன் என்றும், ஒரு கல்லூரி மாணவனாக  உணரத் தொடங்கிய பின் தான் நடிக்க தொடங்கினேன் என அருள் நிதி தெரிவித்துள்ளார்.