திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (17:56 IST)

ஜெய்ப்பூருக்கு கிளம்பிய விஜய் சேதுபதி! கொரோனாவுக்கு பின் ஷூட் செல்லும் முதல் ஹீரோ!

விஜய் சேதுபதி தான் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஜெய்ப்பூர் கிளம்பியுள்ளார்.

கொரோனா காரணமாக முடங்கி இருந்த தமிழ் சினிமா உலகம் அரசு அனுமதி அளித்ததை அடுத்து இப்போது லேசாக சுறுசுறுப்பு அடைய ஆரம்பித்துள்ளது. சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டு இருந்த நிலையில் இப்போது ஜெய்ப்பூருக்கு கிளம்பியுள்ளார் விஜய் சேதுபதி.

இதன் மூலம் கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் முதலில் கலந்துகொள்ளும் கதாநாயகன் என்ற பெருமையை பெறுகிறார் விஜய் சேதுபதி. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி குடும்பத்தோடு ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம்.