முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? என்னய்ய சொல்றீங்க!
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷான், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் மாநகரம். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ் காந்த் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய வெற்றி பெற்ற மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் பங்கேற்பதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததோடு இந்த படத்தின் டைட்டில் மும்பைகார் என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரிஜினல் படத்தில் நடிக்காத விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த் நடித்த நகைச்சுவை கதாபாத்திரத்தில்தான் நடிக்க உள்ளாராம்.