1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (07:20 IST)

பேய் ஓட்டுபவராக விஜய் சேதுபதி…. எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் பேய் ஓட்டுபவராக நடிக்க உள்ளாராம்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார். மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் சர்ப்ரைஸ்களில் ஒன்றாக நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும், இந்தியிலும் இப்போது பிஸியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி இந்த படத்தில் மிஷ்கினுக்காக நடிக்க சம்மதித்துள்ளாராம். இந்த படத்தில் அவர் பேய் ஓட்டுபவராக நடிக்க உள்ளாராம்.