வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (22:39 IST)

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டிய விஜய்

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் நிர்வாகிகளை  நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்காக பல முக்கிய தமிழக கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், முதன்முறையாக விஜய் அனுமதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியினர். இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் வெற்றியடைந்தனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஊரடக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.