1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (16:29 IST)

குழந்தைகளுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்

vijay makkal iyakkam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், தற்போது விஜய்68 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். யுவன் இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
நடிகர் விஜய், சினிமாவில் நடித்து வருவதுடன் விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கலில் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது.
 
சமீபத்தில்,  மாணவர்களுக்கு இலவச விஜய் நூலகம் அமைக்கப்பட்டது.
 
இந்த நிலையில், விஜய்யின் சொல்லுங்கிணங்க, அவரது மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு மக்கள் இயக்கத்தினர் பால் மற்றும் ரொட்டி மற்றும் முட்டை வழங்கினர்.
 
குறிப்பாக, திருச்சி, மத்திய சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ரொட்டி, பால், முட்டை    வழங்கியதாக அதிகாரப்பூர்வமாக பதிவிட்டு புகைப்படமும் பகிர்ந்துள்ளனர்.