புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (19:36 IST)

ஆசிரியர்களை கெளரவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

vijay makkal iyakkam
அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் புனித மார்ட்டின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு,  விஜய் மக்கள் இயக்கத்தினர்  பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்  அவர்கள்   சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவராகவும், இந்தியாவின் 2 வது குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.

இந்தியாவில் தலைசிறந்த ஆசிரியராகப் போற்றப்படும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், டாக்டர். சர்வபள்ளி_இராதாகிருஷ்ணன் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

இதுகுறித்து, வி.ம.இ பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, டாக்டர்.சர்வபள்ளி_இராதாகிருஷ்ணன் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு! தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக , ஆசிரியர்_தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் புனித மார்ட்டின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக் பொன்னாடை போர்த்தி கௌரவித்து பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.