வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (11:30 IST)

நான் ரெடி பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு… படக்குழு செய்யவுள்ள மாற்றம்!

மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ‘நான் ரெடி என்ற பாடல் வெளியாகி இருந்தது. அந்த பாடலில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் வாயில் சிகரெட்டோடுதான் தோன்றினார். இது பலபேரை மேலும் முகம் சுழிக்க வைத்தது.

இந்நிலையில் விஜய்யின் மீது சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற சமூகநல ஆர்வலர் போத பொருள் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் ”போதை பொருள் பழக்கத்தை ஆதரிப்பதகாவும் ரௌடியிசத்தை தூண்டுவதாகவும் அந்த பாடல் இருப்பதாகவும்” தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளார்.

இப்படி புகார்கள் எழுந்துள்ள நிலையில் பாடல் காட்சிகள் படத்தில் இடம்பெறும்போது நிறைய மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.