வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:53 IST)

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

வாரிசு திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் படப்பிடிப்பு தொடங்கியது முதலே அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இப்போது இயக்குனர் வம்சி படப்பிடிப்புத் தளத்துக்குள் யாருமே செல்போன் எடுத்து வரக்கூடாது என ஸ்ட்ரிட்க்காக தடை உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.