1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:50 IST)

டுவிட்டரில் இணைந்தார் விஜய்யின் தாயார்: முதல் டுவிட் என்ன தெரியுமா?

vijay shoba
தளபதி விஜய் ஏற்கனவே டுவிட்டரில் இருக்கும் நிலையில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழ் திரை உலகில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர் என்பதும் தங்களுடைய திரைப்படங்கள் குறித்த தகவல்களை அதில் பதிவு செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
ஏற்கனவே தளபதி விஜய் டுவிட்டர் பக்கம் வைத்திருக்கும் நிலையில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார். அவர் தனது முதல் டுவிட்டில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எனது அன்பு மகன் புகைப்படத்தை பதிவு செய்வதில் மகிழ்ச்சி என்றும் டுவிட்டரில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து ஷோபா சந்திரசேகர் அவர்களின் டுவிட்டர் பக்கத்திற்கு ஏராளமானவ ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது