வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 மே 2023 (14:34 IST)

தனுஷுக்கு அண்ணனாக எஸ் ஜே சூர்யா… தனுஷ் 50 பட லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவின் திறமைமிகு நடிகர்களில் ஒருவரான  தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படம் தனுஷின் 50 ஆவது படமாக அமைய உள்ளது.

இந்த படம் பற்றிய அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் தனுஷுக்கு சகோதரர்களாக வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.