1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 மே 2024 (11:25 IST)

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் ஆரம்பகாலத்தில் அவருக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். அதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அறிமுகம் கிடைத்தது. ஆனால் இப்போது விஜயகாந்த் மகனுக்கு விஜய் எந்த உதவியும் செய்யவில்லை என்று அவர் மேல் விமர்சனம் வந்தது. அதனால் அந்த ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டால் அந்த விமர்சனங்களுக்கு பதில் சொன்னது போல ஆகிவிடும் என்றும் இப்போது அரசியலில் இறங்கியுள்ளதால் தேமுதிக தொண்டர்களிடம் நற்பெயரை பெற்றது போலவும் இருக்கும் என விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.