1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (11:38 IST)

ஆதரவற்றோர்களுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

தேனியில் ஆதரவற்றோருக்கு தீபாவளியை ஒட்டி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் புதிய ஆடைகள் வாங்கி கொடுத்துள்ளனர்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவருக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்மன்றங்கள் உள்ளன. அதை அனைத்தையும் ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.