செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:20 IST)

ஜவான் படம் நடக்கக் காரணமே விஜய் அண்ணாதான்… அட்லி பேச்சு!

பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சென்னையில் நேற்று ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் இயக்குனர் அட்லி, ஷாருக் கான், விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அட்லி “இந்த படம் நடக்க காரணமே விஜய் அண்ணாதான். அவர் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார்.  என்ன நடந்தாலும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய நெகட்டிவிட்டி வரும். அதையெல்லாம் விஜய் அண்ணா சொல்வது போல ‘இக்னோர் நெகட்டிவிட்டி நண்பா’ எனக் கடந்து போக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.