செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (00:31 IST)

பிரிட்டனில் இருந்து சீனா திரும்பிய இளையதளபதி விஜய்

இளையதளபதி விஜய் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக பிரிட்டன் செல்வது வழக்கம். விஜய்யின் மனைவி சங்கீதாவின் பெற்றோர் லண்டனில் இருப்பதால் இந்த பயணம் ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தளபதி 62 படத்தின் போட்டோஷூட் இருந்ததால் புத்தாண்டு கழித்தே தளபதி விஜய் லண்டன் சென்றார்

இந்த நிலையில் லண்டனை அடுத்து விஜய் தற்போது சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளதாகவும், அங்கு சிலநாட்கள் ஓய்வு எடுக்கும் விஜய், வரும் 12ஆம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை திரும்பியதும் பொங்கல் பண்டிகையை அடுத்து அவர் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்த நிலையில் 'தளபதி 62' படப்பிடிப்புக்கு தேவையான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுவதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.