புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2018 (11:25 IST)

நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்தை இப்போது நினைக்க தோன்றுகிறது; எஸ்.வி.சேகர் டுவீட்

வெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரை கூட அவமானப்படுத்தாமல் கவுரமாக நடத்திய விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது என எஸ்.வி.சேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 
மலேசியாவில் தமிழ் சினிமாவின் நட்சத்திட கலைவிழா நடந்து வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடசத்திரங்கள் கலந்துக்கொண்டனர். சரத்குமார், ராதிகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதை ராதிகாவே தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், வெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல் (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரமாக நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனொ இப்போது நினைக்க தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.