1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:48 IST)

’வாரிசு’ புகைப்படம் மீண்டும் லீக்: அதிர்ச்சியில் இயக்குனர் வம்சி!

Varisu Poster
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ அவ்வப்போது லீக் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என சமீபத்தில் இயக்குனர் வம்சி உத்தரவிட்டிருந்தார்
 
இந்த உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் குறிப்பாக இயக்குனர் வம்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் 
 
இதுகுறித்து விசாரணை நடத்த படக்குழுவினர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக வாரிசு படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ லீக் ஆகி வருவது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்தது