செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (11:30 IST)

’மாஸ்டர்’ படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் விஜய் படம்!

’மாஸ்டர்’ படத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகும் விஜய் படம்!
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது என்பதும், தற்போது ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தினர் தினந்தோறும் படத்தின் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே விஜய்யின் பழைய திரைப்படம் ஒன்றை வெளியிட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ’தலைவா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது
 
ஜனவரி 8ஆம் தேதி மீண்டும் ’தலைவா’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் அமலாபால் இணைந்து நடித்த இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
’மாஸ்டர்’ கொண்டாட்டத்திற்கு முன்பாகவே விஜய் ரசிகர்கள் ’தலைவா’ படத்தை பார்த்து பொங்கல் திருநாளை கொண்டாட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் திரையில் ’தலைவா’ திரைப்படம் வெளியாக இருப்பதை அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்