‘பிகில்’ டீசரெல்லாம் கிடையாது, ஸ்ட்ரெய்ட்டா டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (18:26 IST)
நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள ‘பிகில்’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்னும் டீசர் மற்றும் டிரைலரே வெளியாகவில்லை என்று விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தி அடைந்த நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி வரும் திங்கள் அன்று டீசர் அல்லது டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறினார்

இந்த நிலையில் சற்றுமுன் ‘பிகில்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதால் டீசரை வெளியிடாமல் நேரடியாக டிரைலரை படகுழுவினர் வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏஆர் ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் விஜய்,
நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,
இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :