விஜய்யின் கோட் படத்தின் பிஸ்னஸ்ஸில் ஏற்பட்ட சுணக்கம்… பின்னணி என்ன?
அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதத்தில் கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு என்ற பாடல் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பாடல் பெரும்பாலான விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
இந்நிலையில் கோட் படத்தின் பிஸ்னஸை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான லியோ படத்தின் பிஸ்னஸை விட இந்த படத்துக்கு குறைவான அளவிலேயே அனைத்து உரிமைகளின் வியாபாரமும் நடப்பதாக சொல்லப்படுகிறது. லியோ படத்தை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவான அளவிலேயே தியேட்டர் உரிமை வியாபாரம் நடப்பதாக சொல்லப்படுகிறது.