வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (17:07 IST)

உடலுறுப்பு தானம் செய்த விஜய் ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.


 

 
ஜூன் மாதம் 22ஆம் தேதி விஜய் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். விஜய் பிறந்தநாளை எப்போது அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் காஞ்சி கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் 43 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்த விழாவில் பம்மல் மற்றும் பல்லாவரம் நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
 
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். விஜய் பிறந்தநாளில் அவரது 61வது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.