செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:11 IST)

வெறித்தனமான விஜய் ரசிகர்: பெற்ற மகனை வைத்து செய்த காரியம்!!!

விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு தளபதி விஜய் என பெயரிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழகம் மட்டுமல்லாது இவருக்கு பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது படம் ரிலீசன்று கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என இவர்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை.
 
சில ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளன்று ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். விஜய் மீது அவ்வளவு பாசமும் மரியாதையையும் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் பாண்டிச்சேரியை சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற தீவிர விஜய் ரசிகருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் மீதான பாசத்தால் அவர் தன் மகனுக்கு தளபதி விஜய் என்று பெயர் வைத்துள்ளார். இவரது மகனின் பர்த் சர்ட்டிஃபிகேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.