கண்ணுபட போகுதும்மா! சுத்திபோட்டுக்கோ...அனுஷ்கா சர்மாவை வாழ்த்தும் ரசிகர்கள்

Kholi
VM| Last Modified ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (09:25 IST)
நடிகை அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி  நியூசிலாந்தில் அந்த நாட்டு அணிக்கு  எதிராக   விளையாடி வருகிறார். அதேபோல் கிடைக்கும் ஓய்வில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நியூசிலாந்தில் பல இடங்களில் சுற்றி வருகிறார். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டரில் அனுஷ்கா சர்மா பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிப்பு செய்வது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தற்போது தனது காதல் கணவர் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் எனது சிறந்த நண்பன் என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் சில மணி துளிகளில் பல ஆயிரம் லைக் பெற்றது.  இந்த  படத்தை பார்த்து பலரும் அனுஷ்கா சர்மாவை வாழ்த்தி வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :