ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:06 IST)

சந்திரமுகி 2 இந்தி டப்பிங்கில் டபுள் மீனிங் வசனங்கள்… தெறித்து ஓடும் ரசிகர்கள்!

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்கனாவின் நடிப்பும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங்கும் எதிர்பார்த்த படி போகவில்லை. இதற்குக் காரணம் இந்தி டப்பிங்கில் வடிவேலுவின் காமெடி வசனங்களில் சம்மந்தமில்லாத டபுள் மீனிங் வசனங்களைப் போட்டு படத்தையே கெடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தைப் பார்க்க மக்கள் அங்கும் வரவில்லை என சொல்லப்படுகிறது.