வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (17:52 IST)

பிகிலி, ஆன்ட்டி பிகிலி யார்? சஸ்பென்ஸ் உடைத்த பிரபல நடிகர்!

பிகிலி, ஆன்ட்டி பிகிலி யார்? சஸ்பென்ஸ் உடைத்த பிரபல நடிகர்!
கடந்த சில நாட்களாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிகிலி மற்றும் ஆன்ட்டி பிகிலிஎன்ற சொற்கள் வலம் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே 
 
பிகிலி என்றால் யார் ஏதாவது ஒரு திரைப்படத்தின் டைட்டிலா? என்பது குறித்த கேள்வியையும் ரசிகர் மனதில் எழுந்தது 
 
இந்த நிலையில் இதற்கான விடையை நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
ஆன்ட்டி பிகிலி கேரக்டரில் தான் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருவதாகவும் இதே படத்தில் நடிக்கும் பிகில் கேரக்டர் தான் இந்த படத்தின் வில்லன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அப்படி என்றால் பிகில் கேரக்டரில் நடிப்பது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வரும் நிலையில் விரைவில் அதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது