செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (00:26 IST)

எஸ்.ஏ.சந்திரசேகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய்! குருவுக்கு சிஷ்யனின் நன்றியா?

பிரபல சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் எஸ்.ஏ.சியின் ஜோடியாக நடிகை ரோகிணியும், வில்லன் வேடத்தில் ஆர்.கே.சுரேஷும் நடித்து வருகின்றனர்.


 


இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் விஜய்விக்ரம் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சொந்த கேரக்டரில் அதாவது நடிகர் விஜய் ஆண்டனியாக நடிப்பதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர் என்றும் விஜய்விக்ரம் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். இவர் இயக்கிய 'சுக்ரன்' படத்தில்தான் விஜய் ஆண்டனி இசையமைத்தார். தன்னை அறிமுகம் செய்த குருவுக்கு செலுத்தும் நன்றியாக விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.