வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (08:16 IST)

லியோ படம் பற்றி பரவும் தகவல் உண்மையா?

விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்போது திடீரென லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆனால் இதுபற்றி திரைத்துறை சேர்ந்த பிரபலங்கள் தெரிவிக்கும் செய்தி வேறு விதமாக உள்ளது. லியோ படத்தை இதுவரை ஒருபாகமாக மட்டுமே உருவாக்கி வருகிறார்களாம். ஆனால் இரண்டாம் பாகத்துக்கான லீட் கிளைமேக்ஸுக்கு பிறகு இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை படம் அதிரி புதிரி ஹிட்டானால் பிறகு இரண்டாவது பார்ட் உருவாக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.