வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (18:27 IST)

விஜய்யின் 66 வது படத்தின் கதைக்களம் என்ன??

விஜய்யின் 66 வது படம் ஆக்‌ஷன் படமாக இருக்காது என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.

 
தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான பீஸ்ட் படத்ஹ்டின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிய உள்ள நிலையில் 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாம். அதற்கான வேலைகளை வம்சி இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில், விஜயின் 66 வது படம் ஆக்‌ஷன் படமாக இருக்காது எனவும், உணர்வுகள் நிரம்பிய வகையிலேயே அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.