’தளபதி 66’ படம் குறித்த அதிரடி அறிவிப்பு!
தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான பீஸ்ட் படத்ஹ்டின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதமே வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பொதுவாக விஜய் படம் ஒன்று, ரிலீசான பிறகுதான் அந்தப் அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும். ஆனால் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் விஜய்யின் 66 வது படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும் தில்ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் தமிழ் தெலுங்கில் தயாராக உள்ள இந்த திரைப்படம் மிகப் பிரமாண்டமான அளவில் தயாரிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது