அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘விஜய் 61’ படத்தின் முதல்கட்ட படபிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விஜயின் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராகிய காஜல் அகர்வால் தனது கேரக்டர் குறித்தும் விஜய் கேரக்டர் குறித்தும் கூறியுள்ளார். இப்படத்தில் நானும் விஜய்யும் ஒரே இடத்தில் பணிபுரியும் காதபாத்திரத்தில் நடிக்கிறோம். நாங்கள் பணிபுரியும் இடத்தில்தான் முதன்முதலில் சந்திக்கின்றோம். மேலும் இந்த படத்தில் விஜய்யின் மூன்றாவது கேரக்டரில் விஜய் ஸ்டைலான நகரத்து இளைஞன் கேரக்டருக்குத்தான் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றாராம்.
இதனை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.