நெகட்டிவாக பேசினால் இனி நோ ரியாக்சன்; மன்னிப்பு கேட்ட வின்கேஷ் சிவன்

Vignesh Shivan
Last Updated: ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (15:37 IST)
டுவிட்டரில் பொங்கி எழுந்த விக்னேஷ் சிவனை பலரும் விமர்சித்தை அடுத்து தற்போது விக்னேஷ் சிவன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

 
ஜனவரியில் எந்த படமும் ஹிட்டாக வில்லை என ரசிகர் ஒருவர் டுவிட்டர் கருத்து பதிவிட்டார். இதைப்பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் கோபமடைந்து டுவீட் மேல் டுவீட் போட்டு விளாசி தள்ளினார். இதற்கு ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவனை விமர்சித்து கருத்து பதிவிட்டனர்.
 
விமர்சனம் எழுந்தால் அதை பார்த்துவிட்டு இப்படியா கோபப்படுவது. விமர்சனங்களை எப்படி சமாளிப்பது என்று இயக்குனர் ஷங்கர் ஏன் அட்லீயிடம் இருந்து கூட கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டது. 
 
இந்நிலையில் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நெகட்டிவாக பேசினால் இனிமேல் ரியாக்ட் செய்ய மாட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். கோபமடைந்துவிட்டேன். நீங்கள் எனக்கு அன்பான இயக்குனர் என்ற பெயரை கொடுத்து உள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :