பெய்டு டுவிட்டர்களுக்கு சவுக்கடி கொடுத்த விக்னேஷ்சிவன்

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (21:46 IST)
டுவிட்டரில் ஒருசில ஆயிரங்களில் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டால் போதும். உடனே திரையுலகினர்களிடம் சென்று படத்தை புரமோஷன் செய்ய இவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் பேசும் கலாச்சாரம் பெருகி வருகிறது. இந்த பெய்டு டுவிட்டர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த படத்தை பற்றி முதல் நாளே நெகட்டிவ் விமர்சனம் செய்து படத்தை ஓடவிடாமல் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு பெய்டு டுவிட்டர் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு வெற்றிப்படம் கூட வெளியாகவில்லை என்றும் பிப்ரவரி மாதமாவது திரையுலகினர்களுக்கு நல்ல மாதமாக இருக்கட்டும் என்றும் டுவீட் போட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான இயக்குனர் விக்னேஷ் சிவன், 'இதுபோன்ற நபர்களால் தான் நல்ல படத்திற்கும் மோசமான வசூல் வருகிறது. இவ்வளவிற்கும் இவர் போன்றவர் எங்களது அலுவலகத்தில் பிச்சைக்காரர் போல பணத்திற்கு காத்திருந்தவர்கள் தான். பணத்தையும் வாங்கிக்கொண்டு இதுபோன்ற டுவிட்டையும் பதிவு செய்து வருவதாக டுவீட் போட்டியிருந்தார்.

இந்த இரண்டு டுவீட்டுக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இருவருமே தங்களது டுவீட்டுக்களை டெலிட் செய்துவிட்டனர். இருப்பினும், பிரிண்ட்ஸ்க்ரீன் எடுத்து வைத்திருந்த பலர் இந்த டுவீட்டுக்களை வைரலாக்கி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :