இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பா? – டிவிட்டரில் விக்னேஷ் சிவன் செய்த செயல்!
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜித் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என்றும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் சில வாரங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் அஜித் 62 பட அப்டேட் கொடுத்திருந்த பதிவை இப்போது லைக் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.