வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (11:54 IST)

ஒன்னோட நடந்தா.. ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடிய பாடல் ரிலீஸ்..!

viduthalai1
ஒன்னோட நடந்தா.. ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடிய பாடல் ரிலீஸ்..!
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தில் இடம் பெற்ற 'உன்னோட நடந்தா’ என்ற பாடல் சற்றுமுன் ரிலீஸ் ஆகியுள்ளது. 
 
இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் ஐந்து நிமிடங்கள் கொண்ட பாடலாக உருவாகியுள்ளது. தனுஷ் மற்றும் அனன்யா பட் பாடிய இந்த பாடலை சுகா என்பவர் எழுதியுள்ளார், இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் இந்த படத்தை எல்ரெட்குமார் தயாரித்துள்ளார் என்பதும் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜெய மோகன் கதைக்கு திரைக்கதை எழுதி வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிய நிலையில் முதல் பாகம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது 
 
Edited by Siva