ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:53 IST)

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகும் விடுதலை படத்தினை இயக்கி வருகிறார்.

தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது அவர் விடுதலை படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதையடுத்து கமல், விஜய் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாகவும் ஏற்கனவே இயக்கி முடித்த வடசென்னை  படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆருக்குக் கதை ஒன்றை சொல்லி அந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.