வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (18:35 IST)

5 மொழிகளில் ரிலீஸாகும் விஜய்யின் அடுத்த படம்… தயாரிப்பாளரின் அதிரடி முடிவு!

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படம் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலிஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.