1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:22 IST)

தியேட்டரில் இல்லாத காட்சிகளோடு ஓடிடியில் வெளியாகும் ‘விடுதலை’! வெற்றிமாறன் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது அடுத்த பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் விடுதலை திரைப்படம் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. ஓடிடியில் இயக்குனர் கட் என சொல்லப்படும் திரையரங்கில் நீளம் காரணமாக நீக்கப்பட்ட காட்சிகளும் இணைந்த எக்ஸ்டண்டட் வடிவமாக ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது திரையரங்கில் ஏற்கனவே பார்த்தவர்களையும் இன்னொரு முறை பார்க்கத்தூண்டும் விதமாக அமைந்துள்ளது.